மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது – இராணுவப்பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்க விசேட அதிரடிப்படையினர் போதியளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

வாபஸ் பெற்றுக்கொண்ட இராணுவப் படையினரின் எண்ணிக்கைக்கு நிகரான விசேட அதிரடிப்படையினர் மஹிந்தவின் பாதுகாப்பு கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் விசேட பயிற்சி பெற்றவர்கள் என ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொண்டமை குறித்து ஊடகமொன்றுக்கு  பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.