யாழில் வெப்பம் காரணாமாக ஏற்பட்ட மின் ஒழுக்கினால் வீடு ஒன்று எரிந்து நாசம்

வெப்பத்தின் கொடுமையினாலும் மின் ஒழுக்கினாலும் கோயில் வீதி மல்லாகத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்…..

இரண்டு பெறுமதியான மோட்டார் வண்டிகள் , துவிச்சக்கர வண்டி உட்பட வீட்டு பெறுமதிவாய்ந்த பொருட்கள் , பணம் , நகைகள் , வீட்டு தளபாடங்கள் என்பன முற்றாக எரிந்து சம்பலாகியது. உயிர் ஆபத்துக்கள் எதுவும் இல்லை.

அன்பான உறவுகளே…..
மோட்டார் வண்டிக்கு பெற்றோல் நிரப்பும் போது அளவாக நிரப்பவும் அதிகமாக நிரப்ப வேண்டாம். மின்சார கம்பிகளில் ஒழுக்கு உள்ளதா என பார்க்கவும். காஸ்சிலிண்டர்களை வெப்பம் குறைந்த இடத்தில் வைத்து வெடிக்காதவாறு பாதுகாக்கவும்.

மீண்டும் இவ்வாறான நிகழ்வு ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வோம்.