திருமணங்களோ, இறுதிச்சடங்குகளோ நடக்கக் கூடாது – வடகொரிய அதிபர் உத்தரவு

வட கொரியா அதிபர் தன் நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வட கொரியா நாட்டின் உயர் தலைவராக கிம் ஜாங் இருந்து வந்தாலும், முறைப்படி அவர் இன்னும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில், கிம்ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்யவிருக்கும் நிகழ்ச்சி மே 6 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது.

ஆனால் சரியான திகதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்பு கருதி, நான் பதவியேற்கும் வரை நாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.