நாடாளுமன்றத்தில் இன்று எம்.பி.க்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்த நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சந்தீத் சமரசிங்க மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட இராணுவத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டமையை கடுமையாக கண்டித்த அவரது ஆதரவு அணியினருக்கும் ஆளும் தரப்புக்குமிடையே இன்று சபையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற இம் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்.