காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

காலி மற்றும் மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உணவடுன மற்றும் கடுகொடவுக்கு இடையிலான ரயில் பாதையில் பாலமொன்றின் புனரமைப்பு பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளமையே இதற்குக் காரணம் என, ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி இம்மாதம் 6ம் திகதி இரவு 10.00 மணி முதல் 9ம் திகதி அதிகாலை 03.00 மணி வரை காலி மற்றும் மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறாது என அவர் கூறியுள்ளார்.