மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள குளம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரை மடு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(3) கைது செய்துள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் காட்டுப்பகுதியில் உள்ள புலிப்பாலன் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிய நிலையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குளத்தில் உள்ள நீரை அப்பகுதியில் உள்ள காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகள் குடித்து வந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மடு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.