சிறுவர் துஷ்பிரயோகத்தில் பொலன்னறுவை முதலாம் இடம்!

இலங்கையில் அதிகளவு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் மாவட்டங்களில் பொலன்னறுவை முதலாம் இடத்தை வகிப்பதாக சட்ட வைத்தியர் பி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

2015இல் மட்டும் 220 சம்பவங்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியிருப்பதாக பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இரண்டாம், மூன்றாம் இடங்களில் அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல மாவட்டங்களில் வைத்திய ரீதியில் கடமையாற்றிய போதும், பொலன்னறுவை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒரு போதும் கேள்வியுற்றதில்லை என சட்ட வைத்தியர் பி.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.