இங்கிலாந்து நோக்கி கனவுகளுடன் பறந்தது இலங்கை அணி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதன் பொருட்டு, கொழும்பில் இருந்து இலங்கை அணி புறப்பட்டுள்ளது, இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் Graham Ford கூறியதாவது, இங்கிலாந்தில் கடினமான சவாலை எதிர்கொள்வதற்கு இலங்கை அணி தயாராக உள்ளது.

இதற்கான முறையான பயிற்சிகள் கொழும்பில் வைத்து வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வைத்து 3 நாட்கள் பயிற்சி மேற்கொண்ட பின்னர், மே 19 ஆம் திகதி இலங்கை அணி, இங்கிலாந்துடன் மோதவிருக்கிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=KZeUEvWingg” width=”560″ height=”315″]