தம்மை நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தியமையானது நீதியான செயலல்ல என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், சம்பவம் இடம்பெற்றபின்னர் சபாநாயகர் இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டிருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
சீ.சீ.டி.வி கமரா மூலம் கிடைத்த காணொளியை கொண்டே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்த காணொளி காட்சி பார்க்கப்பட்டபோது கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் எவரும் இருக்கவில்லை.
எனவே இங்கு வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்று ரணவீர குறிப்பிட்ட அவர், இது தாம் அங்கம் வகிக்கும் கம்பஹா மக்களின் இறைமையை பாதிக்கும் செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.