கைது செய்த ஏழு மாணவர்களையும் விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

மாணவியை பகடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று(5) கைதுசெய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுவிக்குமாறு கோரி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் பேராதனை பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் கலஹா சந்தியில் நடைபெற்றது.

பொய்யான  குற்றச்சாட்டின் பேரில் மேற்படி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் கோரி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் சதுர சிந்தக, ‘ ஏழு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டமையானது பெரும் அநீதியானது  அவர்களை விடுதலை செய்யுங்கள்’ என்றார்.