வற் வரி குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே அறவீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறுகிய கால அடிப்படையிலேயே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன நேற்றையதினம்(06) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு கடன் மற்றும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிடமிருந்து கடன் மற்றும் உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உதவிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் வற் வரியை 12 வீதமளவில் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.