பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள மெஜஸ்டிக் சிட்டி அருகே பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – காலி வீதியில் பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மெஜஸ்டிக் சிட்டி கட்டிடத் தொகுதி தலைநகரின் பிரபல்யமான ஒரு வர்த்தக கட்டடத் தொகுதியாகும்.
இந்நிலையில் இன்று காலை மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக நிலையக் கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வர்த்தகக் கட்டடத் தொகுதியில் திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தற்போது குறித்த இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
குறித்த தீவிபத்தின் காரணமாக மெஜஸ்டிக் சிட்டி வாடிக்கையாளர்கள், பம்பலப்பிட்டி ரயில் நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.