ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 58 நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் குறித்த சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை விரைவில் நிறைவு செய்தல் போன்ற நிபந்தனைகள் அதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மனித உரிமைகள் குறித்த செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தல் மற்றும் புதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரத்தைப் பகிர நடவடிக்கை எடுத்தல், வடக்கிலுள்ள நிலங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளர்களுக்கே மீளளித்தல் போன்றனவும் குறித்த ஒப்பந்தத்தில் அடங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
மேலும், இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மீளளிக்கப்பட வேண்டுமாயின் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.