கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சார நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிய சீன நிறுவனம் ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த சீன நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ள சீன நிறுவனம் ஒன்றுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை ஒன்று அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றவை என குறித்த சீன நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.