கற்றது போதும் இது சாதிக்கும் நேரம் – கோலி

போதியளவு கற்றுக் கொண்டோம். இனி சாதனை படைக்க வேண்டும் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கெப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஜூன் 10-ம் திகதி அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

இதில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசம் செல்லும் முன் கொல்கத்தாவில் நேற்று (7) பத்திரிகையாளர்களை சந்தித்த விராட் கோலி;

”நாங்கள் போதுமான அளவு கற்றுக் கொண்டோம். இனிமேலும் கற்க வேண்டும் என்ற மனநிலையுடன் களமிறங்கக் கூடாது. உண்மையில், ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்க்கும்போது உட்பட,எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொண்டே இருக்கலாம், போதுமான அளவு விளையாடி விட்டோம்.

இனி ஒரு அணியாக இருந்து சாதிக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது. அணி முழுமையான வடிவத்தில் உள்ளது.

ஒவ்வொருவரும் புதிய தொடக்கத்தை எதிர்பார்த்துள்ளனர். அணியை முன்னின்று வழிநடத்துவதை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். இதற்கு முன் கெப்டனாக செயல்பட்டுள்ளேன்.

இருந்தாலும் ஒரு நாள், 20 ஓவர் ஆட்டங்களில் கெப்டனாக இருந்ததற்கும், டெஸ்ட் போட்டிக்கு கெப்டனாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

தொடர்ந்து ரவி சாஸ்திரியிடம் எவ்வளவு காலம் இந்திய அணியின் இயக்குநராக நீடிப்பீர்கள் என்ற கேள்வியை எழுப்பவே;

”தற்போது மூன்று பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே கூடுதலாக ஒரு பயிற்சியாளர் தேவையில்லை.

தேவையெனில், தலைமை பயிற்சியாளராக எனது பணியைத் தொடர்வேன். எனவே தலைமை பயிற்சியாளர் இல்லை என்பது இல்லை.பிரச்சினையில்லை.

யூகங்கள், எதிர்பார்ப்பு எல்லாம் உங்கள் பிரச்சினை, எனது பிரச்னை அல்ல.

வங்கதேச தொடர் முடிந்த பின் பிசிசிஐ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதன்பின் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நீங்கள் நினைப்பதை விட நான் நீண்ட காலம் எனது பணியில் நீடிப்பேன் என்றார் ரவி சாஸ்திரி.

மேலும்,”கோலி தனி ஆளாக ஆட்டத்தை முடித்து வைக்கும் திறன் படைத்தவர். போராட்டக்காரர். எதிரணி எவ்வளவு திறமையான அணியாக இருந்தாலும், நாம் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது இலக்கு. விளையாட்டு என்றாலே வெற்றிதான் பிரதானம். கோலியும் அதைத்தான் விரும்புகிறார்” என்றார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்.