வெள்ளவத்தை – எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான தாய்.இனப் பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளவத்தையில் கடந்த மாதம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாய்லாந்துப் பெண்ணுக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலையே இவரை நாடு கடத்துமாறு கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவினை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் பிறப்பித்துள்ளார்.

மேலும் வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பு சம்பவத்தில் இலங்கைப் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த பெண் நாடு கடத்தப்படும் வரை மிரிஹான பொலிஸ் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளவத்தையில் சுற்றிவளைக்கப்பட்ட குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடமும், கட்டடத்தின் உரிமையாளரிடமும் மேலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.