மஹிந்தரின் உகண்டா பயணத்தில் நடந்த சுவாரசியங்கள் (PHOTOS)

உகண்டா ஜனாதிபதி யோவேரி மெசிவேனியின் அழைப்பையேற்று அங்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் முன்னாள் தலைவரான தனசிறி அமரதுங்க விமானத்தினுள் செல்பி எடுத்து தன்னுடைய பாசத்திற்குரிய பொஸ்ஸோடு (BOSS ) பயணிப்பதாக அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த பயணத்தில் முன்னாள் இராணுவ சட்ட அதிகாரியும் குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்ற வழக்கறிஞரும் சட்டவல்லுநருமான அஜித் பிரசன்னவும் பயணிப்பதாக அவர் பதிவேற்றியுள்ளார்.

இவர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு சொந்தமான விமானத்தில் துபாய் நாட்டுக்கு பயணிப்பதாகவும் அங்கிருந்து உகண்டா பயணமாவதாகவும் குறிபிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கல்கிஸை பகுதியில் உள்ள வீடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் அவர் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது

mahinda