இம்முறை சமுத்திர தின தொனிப்பொருளாக “சுகாதாரமான உலகிற்காக, சுகாதாரமான சமுத்திரங்கள்” என்பதைக்கருவாகக் கொண்டே நடைபெறுகின்றது.
சர்வதேச சமுத்திர தினத்திற்கான விசேட நிகழ்வு இன்று (08) முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரஞ்ஜித் மீகஸ்வத்த தெரிவித்தார்.
1992 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் சமுத்திர தினம் முதன்முறையாக பிரகடனப்படுத்தப்பட்டது முதல்
2008 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் ஜூன் 08 ஆம் திகதி சர்வதேச சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சமுத்திரங்களின் பாதுகாப்பு மற்றும் சமுத்திரங்கள் அழிவடைவதை தடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து மக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரஞ்ஜித் மீகஸ்வத்த மேலும் சுட்டிக்காட்டினார்.