குறைநிரப்புப் பிரேரணை விவகாரம் – அறிக்கை கோருகிறார் பிரதமர்

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்து, முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குமாறு, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றையதினம்(11) பணித்துள்ளார்.