வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக அரசு தரப்பு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் தரப்பு இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாதங்களுக்கு பதில் அளித்து கர்நாடகா அரசின் மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா தமது வாதங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, ஜூன் 01ம் திகதிக்குள் அனைத்து தரப்பு வாதத்தையும் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறையாக இருந்தாலும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.