களுத்துறை, நாகஸ் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில், 19 பேர் படுகாயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பெண்களாவர். காயமடைந்தவர்களில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹரவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ், தடம்புரண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. பஸ்ஸின் சாரதியை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியாததை அடுத்தே, பஸ் தடம்புரண்டதாக, பஸ்ஸின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில், பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.