ஜேவிபி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அநுர’வினால் விசேட கருத்தரங்கு

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜே.வி.பி. விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்த விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் ஜே.வி.பி மீது சுமத்தப்பட்டு வரும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் மற்றும் சேறு பூசல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மாலை 3.30 அளவில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த ஆகியோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.