கூட்டு எதிரணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இரத்தினபுரி மற்றும் குருநாகல் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிகைகளை எடுக்குமாறு சு.கவின் மத்திய குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, சு.கவின் ஒரு சில உறுப்பினர்கள் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற போதிலும் அவர்கள் கட்சியைப் பற்றியோ அதன் தலைமைத்துவத்தைப் பற்றியோ குறைகூறுவது கிடையாது.
எனவே, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்காமல் சுமூகமாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.