நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்கக் கோரிக்கை

பலத்த மழைக் காரணமாக மகாவலி, களனி மற்றும் களுகங்கை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் பேராதெனிய மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இரத்தினப்புரி மற்றும் மில்லகந்த ஆகி யபகுதிகளில் சிறிய அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாஓயா மற்றும் கிரிஉல்ல ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் அவிசாவளை ஹொலங்குவ பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.