ஹஷீம் அம்லா மயிரிழையில் தப்பினார்

ஐ பி எல் கிரிக்கட் தொடரின் 46 ஆவது போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
இதேவேளை நேற்று நடைபெற்ற 47 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்தாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19.1 ஓவர்களில் 126 ஓட்டங்களை பெற்று சகல விகட்டுகளையும் இழந்தது.
முதல் முறையாய் IPL போட்டியில் பங்கேற்கும் ஹஷீம் அம்லா முதல் IPL இல் மயிரிழையில் அரைச் சதத்தினை  எட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.