முதலாவது டெஸ்ட் போட்டியில் தம்மிக்க விலகல்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் தம்மிக்க பிரசாத் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவருக்கு முதல் போட்டியில் விளையாட முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும், அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19ம் திகதி லீட்ஸில் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.