FCID பிரிவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்ட உபுல் இன்று வலையில்

தென் மாகாண அமைச்சர் டி.வி.உபுல் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று (08) காலை 9.45 அளவில் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்ற உபுலிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

”பொலிஸ் நிதி மோசடி பிரிவு அதிகாரிகளை கல் எறிந்து கொல்ல வேண்டும்” என பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் டி.வி.உபுலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.