கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக இரு கட்சிகளும் சமமான அளவில் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை சுமார் 150 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக 85 இடங்களிலும், திமுக 67 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஒரிரு இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது. போடி நாயக்கனூர் தொகுதியில் தபால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. பூட்டு உடைக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் முன்னிலையில் உள்ளனர். முதல் சுற்று முடிவில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் பின்தங்கியிருந்தார்.
