IPL இனை அதிரவைக்கும் கோஹ்லி…

இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் 50 வது போட்டி நேற்று அசாதாரண காலநிலை காரணமாக தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போட்டியில் ரோயல் செலன்சஸ் பெங்களுர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் போட்டியிட்டன.

ஆட்டம் 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெங்களுர் அணி 3 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலி 113 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில், பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 14 ஓவர்களில் 203 ஓட்டங்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், அந்த அணி 9 விக்கட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.