பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் இரு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

இதில் சந்திரகாந்தனின் பிணைமனு மீதான விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதியும், பிரசாந்தனின் மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 16ஆம் திகதியும் மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.