மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 25 % உயர்வடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் யு.ஆர்.தயானந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
சீரற்ற காலநிலையினால் சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மத்திய மலைநாட்டு மரக்கறி வகைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அவ்வாறு கிடைக்கும் மரக்கறிகளும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
சீரற்ற காலநிலையினால் மரக்கறி செய்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நட்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கறி மிளகாய் 230 ரூபா, ஒரு கிலோ பீட்ருட் 110 ரூபா, ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபா, ஒரு கிலோ தக்காளி 110 ரூபா, ஒரு கிலோ கரட் 100 ரூபா, ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபா, ஒரு கிலோ கோவா 80 ரூபா, ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபா விற்பனை செய்யப்படுவதாகத மேலும் தெரிவித்துள்ளார்.