1ம் டெஸ்டில் இங்கிலாந்து 171/5 சுருண்டது – 2ம் நாள் இன்று

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்க்கு 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பு தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் Headingley மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே பாரிய சரிவை சந்தித்தாலும், நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் குருக்கிடப்பட்டு இடைநிறுத்தப் படுகையில் ஓரளவுக்கு வலுவான நிலையில் காணப்பட்டது.

AN Cook  –  16 ஓட்டங்கள்
AD Hales –  71 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது
NRD Compton  – 0
JE Root  – 0
JM Vince  – 9
BA Stokes  – 12
JM Bairstow  – 54 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது