அனுமதிப் பத்திரம் இன்றியும் பதிவு செய்யப்படாத நிலையிலும் யானைக் குட்டியொன்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிருலப்பனை அலன்மெதினியாராம விகாராதிபதி கலாநிதி உடுவே தம்மாலோக தேரருக்கு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவருக்கெதிரான முறைப்பாட்டிற்கு 19 சாட்சியாளர்களும், 3 எழுத்து மூல ஆதாரங்களும் காணப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.