இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணியினர் அனைத்து விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இங்கிலாந்து அணியினரோ முதல் இனிங்சில் 298 ஓட்டங்களை குவித்திருந்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜே.எம். பெய்ர்ஸ்டோ 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மேதியூஸ் 34 ஓட்டங்களையும், லஹிரு திரிமன்னே 24 ஓட்டங்களையும் பெற்றதோடு அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஜேம்ஸ் எண்டர்சன் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
இங்கிலாந்து அணி சார்பாக ஜே.எம். பெய்ர்ஸ்டோ 140 ஓட்டங்களைப் பெற்றதோடு, இலங்கை அணி சார்பாக தசுன் சானக்க 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
இரண்டாவது நாளாக இன்றும் போட்டிகள் தொடர்கின்றன.



