சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்க்காக ஒரு மில்லியன் ரூபாவினை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் தீர்மானித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சந்த்ரசான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
மேலும்,மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் இறந்த இலங்கையர்க்காக அணி சார்பாக துக்கத்தினை வெளியிடும் முகமாக இலங்கை அணியினர் கைகளில் கறுப்புக் கைவளையல் அணித்து விளையாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“காலநிலை சீற்றத்தினை கருத்தில் கொண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக ஒரு மில்லியன் ரூபாவினை கொடையாக வழங்க ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தீர்மானித்துள்ளார்கள்”
“அவர்கள் இந்நிவாரணத்தை அணி சார்பாகவே வழங்குகின்றனர். தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உட்பட அணியினருக்கு இடையிலான சந்திப்பிலேயே கலந்துரையாடி குறித்த முடிவு எடுக்கப்பட்டது” எனவும் சந்த்ரசான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.