அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது புயல் சின்னமாக உருமாறியுள்ளது.
அதற்கு அஷோபா என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தப் புயல் சூப்பர் சைக்ளோனாக உருவெடுக்கலாம் என இந்திய வானிலௌ ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரபிக் கடலில் கிழக்குமத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து வடக்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
கடந்த ஆறு மணி நேரத்தில் தீவிரமடைந்த இந்தப் புயலுக்கு அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தப் புயலானது கூடுதல் வலுப்பெற்று சூப்பர் சைக்ளோனாக உருவெடுக்கலாம். இருப்பினும் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை.
இருப்பினும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்” எனத் தெரிவித்துள்ளது.