ஹட்டன் – கொழும்பு வீதியின் கித்துல்கல பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக குறித்த வீதியின் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வீதியில் கணரக வாகனங்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகளையும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.