பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு டி- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் வருகின்ற 17ம் திகதி தொடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பலப் பயிற்சியில் ஈடுபட்டது.
இந்நிலையில் நேற்று இரவு பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கைக்கு பயணமாகிறது.
பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோரும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி விபரமானது;
மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), அசார் அலி (துணை அணித்தலைவர்), அகமது சிக்ஹாட், ஷபிக், எஹ்சான் அடில், ஹரிஸ் சொஹைல், இம்ரான் கான், ஜூனைட் கான், முகமது ஹபீஸ், சர்பிராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), ஷான் மசூட், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா , யூனிஸ் கான், சுல்பிக்கார் பாபர்.