மூன்று அமைச்சுக்களை பொறுப்பேற்று – இறுவெட்டையும் கையளித்தார் விக்கி

வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை நான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு நேரில் கூறியிருக்கும் வடமாகண ஆளுநர், கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவினையும் முதலமைச்சருக்கு வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்தே ஆளுநர் தனது ஒலிப்பதிவு அடங்கிய இறுவட் டை (சீ.டி) ஆளுநர் முதலமைச்சருக்கு வழங்கினார்.

வடமாகாண சபை தொடர்பாக ஆளுநர் கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ரெஜினோல்ட் குரே கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் மாலை முதல மைச்சர், மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து பெற்றுக் கொண்ட இரு அமைச்சுக்களை பதவியேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் நிறைவில் தாம் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை முதலமைச்சரிடம் கையளித்திருப்பதுடன், தாம் மாகாண மக்களுக்கும், மாகாணசபைக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிப்பதாகவும் தாம் அவ்வாறு பேசவில்லை எனவும் ஆளுநர் பதிலளித்து, இறுவட்டை போட்டு கேட்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இறுவட்டைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் தாம் முன்னதாகவே ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் சில புரிந்துணர்வுகள் இல்லாமையினாலேயே இந்த பிரச்சினை வந்துள்ளதாக தமது அலுவலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கூறியிருப்பதாக முதலமைச்சர் மேலும் கூறினார்.