UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொடவுக்கு பிணை

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

UPDATE – சுஜித் மற்றும் புபுதுஜாகொட கைது

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட மற்றும் அக்கட்சியின் உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

புபுதுஜாகொட விசாரணைகளுக்காக பொலிசில் ஆஜர் 

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசற்துறை ஏற்பாட்டாளர் புபுதுஜாகொட விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை புபுது சென்றிருந்தார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, புபுது ஜாகொடவின் வீட்டிற்கு மருதானை பொலிஸார் நேற்று கைது செய்வதற்காக சென்றிருந்தனர்.

இதன்போது கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆதாரமோ இல்லாமல் வருகைத் தந்ததாக புபுது ஜாகொட கூறினார்.

மேலும் உத்தரவை எடுத்து வாருங்கள் என்றும் பொலிஸாரிடம் இவர் தெரிவித்துள்ளார். அதற்கமையவே இன்று மருதானை பொலிஸ் நிலையத்திற்கு புபுதுஜாகொட அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த புபுது ஜாகொட, அண்மையில் குடிவரவு, குடியகழ்வு திணைக்கழத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த காரணத்திற்காகவே தாம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த காலத்தில் அரச சொத்துக்களை அழித்தவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது ஜன்னல் கண்ணாடிகளுக்காக தம்மை விசாரணைக்காக அழைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதுவரை முன்னிலை சோசலிசக் கட்சியின் 17 உறுப்பினர்ளை கைது செய்துள்ளதாகவும் இதன்போது புபுதுஜாகொட தெரிவித்தார்.