பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பெங்களுர் ரொயல் செலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பெஷ் டி20 தொடரின்போது, பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசி கெய்ல் சர்ச்சையில் சிக்கினார்.
இதனால், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி கெய்ல் உடனான ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் நாளிதழான ‘த டைம்ஸ்’ பத்திரிகையின் பெண் செய்தியாளர் சார்லோட்டே எட்வர்ட்ஸ்யிடம் சர்ச்சையான முறையில் கெய்ல் பேசியதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த ஊடகவியலாளரின் கேள்விக்கு கெய்ல் பதிலளிக்கையில்;
“என்னிடம் இருப்பது அளவில் மிகப்பெரிய துடுப்பு, அது உலகிலேயே பெரியது. நீங்கள் நினைக்கிறீர்களா உங்களால் அதனை தூக்க முடியுமென்று ? அதனை தூக்க இருகைகளும் வேண்டும்”
ஆனால் கெய்ல் எதோ வேறு அர்த்தத்தில் கூறியதாகாக குறித்த ஊடகவியாளர் மேலும் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா, வீரர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக ரொயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்வாகத்திடமும் விளக்கம் கோரப்படும் என்றும் சுக்லா கூறியுள்ளார்.