சீரற்ற காலநிலை – இன்றும் இடியுடன் கூடிய மழை..

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் இன்று காலை வேளையில் மழை பெய்யக்கூடுவதுடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் புத்திக்க பந்து ரத்ன மேலும் 1எதிர்வுகூறியுள்ளார்.