நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூன் மாதம் 8ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜூன் மாதம் 8ஆம் திகதி பிற்பகல் 02.30 மணி தொடக்கம் 06.30 மணி வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறுவதுடன், 06.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மார்ச் மாதம் 24ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.