ஹம்பாந்தோட்ட துறைமுகம் பாரியளவு நட்டத்தில்

கடந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 677 கோடி ரூபா நட்டமடைந்துள்ளது.

2015ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் நட்டமடைந்த காரணத்தினால், இந்த ஆண்டு இறுதியில் கொழும்பு துறைமுகம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் என கணக்காய்வாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துறைமுகத்தின் எண்ணெய்த் தாங்கிக் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் வட்டி செலுத்துகை மற்றும் துறைமுகத்தின் பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளே நட்டத்திற்கான பிரதான காரணங்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் எண்ணெய்த் தாங்கிக் கட்டமைப்பு நிர்மானத்திற்காக கடன் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளின் போது இந்த நட்டம் பற்றிய விடயங்கள் வெளியாகியுள்ளன.

ஹம்பாந்தோட்டை துறைமுக நட்டமானது, கொழும்பு துறைமுகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணக்காய்வாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.