IPL 2016 – இறுதிப்போட்டி இன்று

இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் (IPL)  இறுதிப்போட்டி இன்று (29) நடைப்பெறவுள்ளது.

குறித்த விருவிருப்பான போட்டியில் சன்ரைசஸ் ஐதரபாத் அணியும் ரோயல் செலன்ஜஸ் பெங்களுர் அணியும் மோதவுள்ளன.

பெங்குளுரில் நடைப்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

2009 ஆம்  2011 ஆம் ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்ற பெங்களூர் அணி, இந்த முறை ஹைதராபாதை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது.

அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் ஹைதராபாத், இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவும் உள்ளது.

லீக் சுற்றில் ஹைதராபாதிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூர் அணிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமென கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.