கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுபாட்டு பொருட்கள் ஆகியவற்றை விளம்பரம் செய்யும் அனைத்து ஒளி மற்றும் ஒலிபரப்புக்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
இத்தகைய வணிகப் பொருட்களின் விளம்பரங்கள் மாசில்லா குழந்தைகளின் மனதில் ஆர்வத்தை தூண்டுகின்றன என்று பொது மக்கள் குற்றம் சுமத்துவதால், அவற்றின் ஒளி மற்றும் ஒலிபரப்புகளை உடினடியாக நிறுத்த வேண்டும் என்று தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒழுங்காற்று அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உலகிலேயே ஆறாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐநா மன்றம் தெரிவித்துள்ளது.