அச்சுவேலி ஈ.பி.டி.பி பொறுப்பு அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் இன்று தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த இவர் அச்சுவேலிப் பொறுப்பாளராகவும் கடமையாற்றி வந்ததுடன் வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
இவர் துாக்கில் தொங்கியதற்கான காரணம் இது வரை அறியப்படவில்லை