அமைச்சர் சம்பிக்க ரணவக்க ராஜினாமா..

பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கையளிக்க உள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் இந்த தகவல் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தரப்பில் உறுதிப்படுத்திய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.