மத்திய வங்கி ஆளுநர் நியமிப்பு குறித்து ஜனாதிபதி நெருக்கடியில்..

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நீடிப்பதா அல்லது புதிய நபர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதா என்ற விவகாரம் நெருக்கடியொன்றை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் மாத கடைசியில் முடிவடைகின்றது. அவருக்கு பதவி நீடிப்பு வழங்குவதா அல்லது புதிய ஆளுநர் ஒருவரை நியமிப்பதா என்ற விடயம் தற்போது ஜனாதிபதியின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

மகேந்திரனுக்கு பதவி நீடிப்பு வழங்குதவற்கு சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கான பதவி நீடிப்பை வழங்கும் விருப்பில் இருக்கின்றார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில் இதுகுறித்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.