நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இதன்படி இன்று வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து அவர் கலந்துரையாடுவார் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதோடு, அங்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 2ம் திகதி வரை இலங்கையில் இருக்கும் டொரே ஹேடர்ம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரையும் சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.